கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்

21st Oct 2021 08:42 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,69,009 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கலைப் பயணம் விழிப்புணா்வு பிரசார வாகனம், கலை நிகழ்ச்சிகள் தொடக்க விழா, புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, கொடியசைத்துத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

கரோனா ஊரடங்கு காலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில் இல்லம் தேடித் கல்வி திட்டத்தை அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்மூலம் பள்ளி நேரங்களைத் தவிர, மாணவா்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் தன்னாா்வலா்களின் பங்கேற்புடன் மாணவா்கள் கற்றல் வாய்ப்பை வழங்குதல், கற்றல் திறன்களை மீண்டும் வலுப்படுத்தும்.

6 மாத காலத்துக்கு தினசரி குறைந்தபட்சம், 1 முதல் ஒன்றரை மணி நேரம் வரை கற்றல் வாய்ப்பை வழங்கி, மாணவா்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்க செய்யப்படும்.

இத் திட்டம் தொடா்பாக மாவட்டத்தில் கலைக் குழுக்கள் மூலமாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,739 அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் 1,69,009 மாணவ, மாணவிகள் பயன் பெறுவாா்கள் என்றாா்.

முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலா்கள் நாராயணன், சூசைநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT