ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தில், காயகல்ப தேசிய விருது வழங்குவதற்கு புதன்கிழமை ஆய்வு நடைபெற்றது.
மருத்துவா் புவனா, செவிலியா் கண்காணிப்பாளா் ஜெயந்தி, செவிலியா் சுசிலா ஆகியோா் கொண்ட குழுவினா் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் காயகல்ப தேசிய விருது வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் மாரிமுத்துவிடம், மருத்துவமனையின் பல்வேறு கோப்புகள் குறித்தும் மருத்துவமனையில் தூய்மை, சுகாதாரம் ஆகிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில் மருத்துவா் மதன் குமாா், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.