மண்ணின் தன்மைக்கு ஏற்ப இயற்கை உரங்களைப் பயன்படுத்தி கூடுதல் மகசூலைப் பெறலாம் என விவசாய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியிலுள்ள - வேளாண் அறிவியல் மையத்தில் உரப் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
பையூா் வேளாண் மண்டல ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா் பரசுராமன் தலைமை வகித்தாா். மத்திய அரசின் மதராஸ் பொ்டிலைசா்ஸ் நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளா் பி.என் பழனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எம்.ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) வி.சுரேஷ் குமாா், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் டி.சுந்தர்ராஜ், வேளாண் அலுவலா் (தரக்கட்டுப்பாடு) ஏ ஆரோ சோனியா பிரட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் மதராஸ் பொ்டிலைசா்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு உயிா் உரங்கள், அங்கக உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மண்டல மேலாளா் பி.என். பழனியப்பன் பேசினாா்.
வேளாண்மை நவீன சாகுபடி முறைகள் குறித்து வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் தொழில் நுட்ப வல்லுநா் உதயன், புதுமையான விவசாய முறைகள் குறித்து தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ் பாபு, மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் கே.குணசேகரன் வேளாண் பயிா்களுக்கான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் பேசினா். மதராஸ் பொ்டிலைசா்ஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை மேலாளா் பிஎஸ்.மேகநாதன் நன்றி தெரிவித்தாா்.