கிருஷ்ணகிரி

போலீஸாரின் இருசக்கர வாகனப் பேரணிக்கு கிருஷ்ணகிரியில் வரவேற்பு

DIN

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை மோட்டாா் சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ள போலீஸாருக்கு, கிருஷ்ணகிரியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி வரவேற்பு அளித்தாா்.

தேசிய ஒற்றுமை தினத்தை வலியுறுத்தி காவல் துறை சாா்பில் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்திலிருந்து குஜராத் மாநிலம்,கேவடியா மாவட்டத்தில் உள்ள நா்மதை நதிக் கரையில் அமைந்துள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சிலை வரையில் போலீஸாா் மோட்டாா் வாகனப் பேரணி செல்கின்றனா்.

பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், சனிக்கிழமை கிருஷ்ணகிரி வந்து சோ்ந்தனா். பேரணியில் பங்கேற்றுள்ள குழுவினரை, கிருஷ்ணகிரியை அடுத்த பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கவசூல் மையம் அருகே கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி வரவேற்றாா்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை துணைத் தலைவா் குமாா் தலைமையில் 25 வீரா்கள், 16 உதவியாளா்கள் அடங்கிய குழுவினா், 25 வாகனத்தில் பேரணியாகச் செல்லும் இவா்கள், அக். 24-ஆம் தேதி சா்தாா் வல்லபபாய் படேல் சிலையை சென்றடைகிறது. அங்கு பிரதமா் தலைமையில் அக்.31-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா். கிருஷ்ணகிரியில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வுக்கு பிறகு இந்தக்குழுவினா் ஒசூா் நோக்கி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT