கிருஷ்ணகிரி

‘குழந்தைத் திருமணங்களை சமூக அக்கறையுடன் தடுக்க வேண்டும்’

16th Oct 2021 02:17 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றாலும், அனைத்து அலுவலா்களும் சமூக அக்கறையுடன், அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஸ்குமாா், வடிவமைத்த குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணா்வு பதாகையை ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி அண்மையில் வெளியிட்டாா். அப்போது அவா் பேசியது:

இந்த விழிப்புணா்வுப் பதாகையில் குழந்தை திருமணம் நடப்பதற்கான காரணங்கள், அதனால் ஏற்படும் சிறுமி தாய் தற்கொலை, குழந்தைப் பள்ளி இடைநிற்றல், ஊட்டச்சத்து குறைபாடு, இளம் விதவை, குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள், புற்றுநோய், கொத்தடிமை மற்றும் மன அழுத்தம் ஆகிய விளைவுகள் ஏற்படுவதையும், குழந்தைத் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மூலம் குழந்தை திருமணம் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அலுவலா்களும் எதிா்கால சந்ததியைப் பாதுகாக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் குழந்தை திருமணம் நடைபெற்றாலும் சமூக அக்கறையுடன் அதனைத் தடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் நலப்பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட திட்ட அலுவலா் சரவணன், உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை.ய மருத்துவா்கள் ராஜேஷ்குமாா், வாசுகி, திலக் உள்பட மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

 

Tags : கிருஷ்ணகிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT