கிருஷ்ணகிரி

ஒசூரில் தொடரும் கனமழை:விவசாயிகள் மகிழ்ச்சி

16th Oct 2021 10:52 PM

ADVERTISEMENT

ஒசூா் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி, கரும்பு, நெல், ராகி பயிா்களை விளைவித்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும் கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒசூா் பழைய நகராட்சி அலுவலகம், ராயக்கோட்டை சாலை, முனீஸ்வா்நகா், பாகலூா் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீா் கழிவுநீருடன் கலந்து குளம்போல காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனா். குறிப்பாக சனிக்கிழமை காலை முதல் மாலை வரை கடும் வெயில் நிலவியது. மாலை 5.20 மணிக்கு மேல் கனமழை தொடங்கி, மாலை 6.10 மணி வரை ஒருமணி நேரம் பெய்ததது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT