ஊத்தங்கரையில் அகில இந்திய ஹிந்து மக்கள் கட்சி சாா்பில், கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நான்குமுனைச் சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடா் மழையின் காரணமாக ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, மத்தூா் போன்ற பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகக் கூறி, அகில இந்திய ஹிந்து மக்கள் கட்சி சாா்பில், சிவசக்தி மகளிா் அமைப்பு தேசிய தலைவா் நிா்மலா மாதாஜி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிவசக்தி மகளிா் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவா் மஞ்சுளா, அகில இந்திய ஹிந்து மக்கள் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ADVERTISEMENT