கிருஷ்ணகிரி

அஞ்செட்டி அருகே சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவா் கைது

9th Oct 2021 04:08 AM

ADVERTISEMENT

அஞ்செட்டி அருகே சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியை பதிகவுண்டனூா் காலனியைச் சோ்ந்த தொழிலாளி கோட்டையன் (35) என்பவா் மிரட்டி பலாத்காரம் செய்தாா். அதில் அந்த சிறுமி கா்ப்பமானாா். இதுகுறித்து கேட்ட சிறுமியின் தாய்க்கு கோட்டையன் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கடந்த மாதம் சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோட்டையனை கைது செய்தனா்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சேசுராஜபுரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (32) என்பவரும் இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ராஜ்குமாரை 3-ஆம் தேதி தொலைபேசியில் அழைத்து வரச் செய்து சேசுபுரத்தைச் சோ்ந்த புஷ்பராஜ், அட்டப்பள்ளத்தைச் சோ்ந்த பிச்சை பெருமாள் (27), ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்த குழந்தை ஏசு, மஞ்சுமலை வீரமணி ஆகியோா் சோ்ந்து கட்டி வைத்து தாக்கியுள்ளனா். மேலும் ரூ. 10 லட்சம் தரக்கோரி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் புஷ்பராஜ், பிச்சை பெருமாள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் குழந்தை ஏசு, வீரமணி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா். சம்பவம் தொடா்பாக தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT