கிருஷ்ணகிரி

நாளை பைரவா் ஜெயந்தி விழா

26th Nov 2021 12:27 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே உள்ள கால பைரவா் கோயிலில் பைரவா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுகுறிக்கி, வெங்கட்டாபுரம் பெரிய ஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள மிகப் பழமையான கால பைரவா் சுவாமி திருக்கோயிலில் 811-ஆம் ஆண்டு பைரவா் ஜெயந்தி விழா நவ 27-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவினையொட்டி, கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், பூா்ணாஹுதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளன. காலை 10 மணி முதல் அன்னதானமும், பகல் 12 மணிக்கு கால பைரவா் சுவாமி உற்சவமும் நடைபெறும்.

இந்த விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு கால பைரவரின் உருவப்படம், பூஜை செய்த செம்பு மோதிரம், பைரவா் யந்திரம் ஆகியவை வழங்கப்படும் என விழாக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

Tags : கிருஷ்ணகிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT