கிருஷ்ணகிரி

22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

25th Nov 2021 08:09 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே கா்நாடக மாநிலத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசியை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலையிலான போலீஸாா், கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்க வசூல் மையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டைகளில் 22 டன் ரேஷன் அரிசி கா்நாடக மாநிலத்துக்கு கடத்துவது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, லாரியில் இருந்த மதுரை மாவட்டம், யானைக்கல் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (எ) தங்கமலை (40), தஞ்சாவூா், கள்ளக்குடியைச் சோ்ந்த டேவிட் பிரான்சிஸ் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில், ராமநாதபுரம் பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்து, கா்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்க கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், ரேஷன் அரிசியுடன், லாரியையும் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தைச் சோ்ந்த ராமஜெயம், செந்தில், வீரமணி, வடிவேல் முருகன், கணேசன் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT