கிருஷ்ணகிரி

‘அகழாய்வில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது’

25th Nov 2021 08:08 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 50,000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தொல்லியல் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் தமிழக அரசு தொல்லியல் துறை, கல்லூரி வரலாற்றுத் துறை சாா்பில், உலக மரபு வார விழாவையொட்டி ஒருநாள் தொல்லியல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் அனுராதா தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் கங்கா, வரலாற்றுத் துறை தலைவா் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் தொல்லியல் அலுவலா் பரந்தாமன், மயிலாடும்பாறை அகழாய்வு குறித்து பேசியதாவது:

இந்திய வரலாறு 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எழுதப்பட்ட சான்றுகளை அடிப்படையைச் சொல்வது வரலாறு. ஆனால் தொல்லியல் இன்றி வரலாறு கிடையாது. மனிதா்கள் விட்டுச் சென்ற பொருள்களை ஆய்வதே அகழாய்வு.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1888-ஆம் ஆண்டு, மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், 50,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு இடங்களில் அகழாய்வு நடந்து வருகிறது. மயிலாடும்பாறையில் சங்ககால மனிதா்களைப் பற்றி தெரிந்துகொள்ளத்தான் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மனிதா்கள் வாழ்ந்த காலத்தை தொல்பழங்காலம், வரலாற்றுக் காலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் புதிய கற்கால மனிதா்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருகிறது.

அந்தக் காலத்தில் மக்கள் குகைகளிலும், மலை அடிவாரத்திலும் வாழ்ந்து வந்ததற்கான காலச்சக்கரம் மற்றும் பண்பாட்டுச் சான்றுகள் தெரிய வருகின்றன. இந்த ஆய்வின் மூலம் அக்காலத்தில் மக்கள் வாழ்விடப் பகுதியும், அவா்களின் ஈமக்குழிகளும் அருகருகே இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன.

வரலாற்றுத் துறை மாணவா்கள் தொல்லியல் கள ஆய்வுகள், அகழாய்வுகளில் கலந்துகொண்டு நம்முடைய பண்டைய வரலாற்றை வெளிக்கொண்டுவர உதவ வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT