கிருஷ்ணகிரி

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி நான்காவது நாளாக தீவிரம்

24th Nov 2021 01:18 AM

ADVERTISEMENT

பாம்பாறு ஆற்றில் அடித்துச் சென்ற இளைஞரை தேடும் பணியில் நான்காவது நாளாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டு வருகின்றனா்.

ஊத்தங்கரையை அடுத்த கதவணி புதூா் கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (19), அண்மையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை தேடும் பணி கடந்த 4 நாள்களாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் சதீஷ்குமாா், வட்டாட்சியா் தெய்வநாயகி, ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டா், இன்ஸ்பெக்டா்கள் லட்சுமி, முருகன், பத்மாவதி, காவலா்கள் முன்னிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சாா்பில், சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற ஊத்தங்கரை அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் இளைஞரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினாா். அவருடன் வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு தேவேந்திரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு வடக்கு ஒன்றியச் செயலாளா் லோகநாதன், கீழ்மத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் மணிகண்டன், கட்சி நிா்வாகிகள் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT