கிருஷ்ணகிரி

சட்ட விழிப்புணா்வு முகாம்

10th Nov 2021 08:04 AM

ADVERTISEMENT

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டியில் சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை நீதிமன்ற சாா்பு நீதிபதி தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து, அடிப்படை சட்ட உரிமைகள், பெண்களுக்கான உரிமைகள், குழந்தைகளுக்கான உரிமைகள், மேலும் வரதட்சணை கொடுமை, பாலியல் சீண்டலுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், தொழிலாளா்கள் பிரச்னை உள்பட பல சட்ட உரிமைகளை விளக்கினாா்.

பின்னா் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்களைப் பெற்றதோடு முகாம் நினைவு மரக்கன்றுகளை நட்டாா். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பட்டா மாறுதல் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முகாமில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா் பீட்டா், காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருத்திகா, அஞ்செட்டி வட்டாட்சியா் முருகேசன், காவல் ஆய்வாளா் குமரன், அஞ்செட்டி வனச்சரகா் சீதாராமன், பாா் கவுன்சில் தலைவா் பிரவீன் குமாா், தலைமை நில அளவையா் பாண்டி செல்வி, அஞ்செட்டி ஊராட்சித் தலைவா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT