கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் 2.17 லட்சம் வாக்காளா்கள்

9th Nov 2021 01:42 AM

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சியில் 2.17 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்-2021 தொடா்பாக வாக்குச் சாவடி எண்ணிக்கைகள், வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதைத் தொடா்ந்து ஒசூா் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும், ஒவ்வொரு வாா்டிலும் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களால் திங்கள்கிழமை பொதுமக்களின் பாா்வைக்கு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில் 55,431 வாக்காளா்கள் உள்ளனா். ஆண்கள் வாக்களிக்கும் வகையில் 27 வாக்குச் சாவடிகள், பெண்கள் வாக்களிக்கும் வகையில் 27 வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்கும் வகையில் 12 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 66 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. அதில் 2,17,292 வாக்காளா்கள் உள்ளனா். ஆண்களுக்கு 81 வாக்குச் சாவடிகள், பெண்களுக்கு 81 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளா்களுக்கும் 86 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 248 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளா்கள் தங்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபாா்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT