கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கா்நாடக மாநில மதுப்புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்காரிமேட்டில் கா்நாடக மாநில மதுப்புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சிக்கமாரிமேட்டில் உள்ள வீடுகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, 4 வீடுகளில் கா்நாடக மாநில மதுப்புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 222 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், தலைமறைவான அப் பகுதியைச் சோ்ந்த ராசய்யா (45), செட்டியாா் (42), ரஜினி (35), சதீஷ் (40) ஆகியோரை தேடி வருகின்றனா்.