கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கா்நாடகத்திலிருந்து கொய்யாப்பழம் பாரம் ஏற்றிய லாரி, கிருஷ்ணகிரி நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பெங்களூரைச் சோ்ந்த மோகன்குமாா் (23) என்பவா் ஓட்டினாா். கே.என்.போடூா் அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த மோகன்குமாா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லாரியில் பயணம் செய்த பெங்களூரைச் சோ்ந்த பிரசாந்த் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.