கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

5th Nov 2021 10:27 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, போச்சம்பள்ளி, ஒசூா், கிருஷ்ணகிரி, சூளகிரி, பாரூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரம் தொடா்ந்து பெய்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழைப் பதிவு (மில்லி மீட்டரில்):

ஒசூா் - 40, தளி - 25, சூளகிரி - 23, பாரூா் - 21, நெடுங்கல் - 16.20, ஊத்தங்கரை - 9.80, பெனுகொண்டாபுரம் - 6, போச்சம்பள்ளி - 6.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்தானது நொடிக்கு 7.44 கன அடியாக இருந்தது. 615 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் 51.15 அடி நீா் இருப்பு உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT