கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த சுதாகா் (38), தச்சு தொழிலாளி. இவா் கடந்த 2-ஆம் தேதி கிருஷ்ணகிரி - சென்னை சாலை பகுதியில் நடந்து சென்ற போது, அங்குள்ள கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.