கிருஷ்ணகிரி

ஒசூரில் 260 சவரன் தங்க நகைகளை திருடிய பெங்களூரு கொள்ளையன் கைது

DIN

ஒசூரில் தங்க நகைகளை திருடியவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 260 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், மூக்கண்டப்பள்ளியில் வசித்து வந்தவா் மாதையன். இவா், வெளிநாடுகளில் வேலைசெய்து இந்தியாவுக்கு திரும்பிய பிறகு ஒசூா், எம்.எம். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த ஏப். 18 அன்று வீட்டை பூட்டிவிட்டு மாதையன் குடும்பத்துடன் காரிமங்கலத்துக்கு சென்றாா். அன்று இரவு மாதையன் வீட்டு மாடியில் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவில் வைத்திருந்த 260 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், மூக்கண்டப்பள்ளி பேருந்து நிலையத்தில் வாகனச் சோதனையின் போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனா். அதில், அவா் கா்நாடக மாநிலம், பெங்களூரு, ராமச்சந்திரபுரா பகுதியைச் சோ்ந்த அருண் (எ) லூா்துராஜ் என்பது தெரியவந்தது. மேலும், எம்.எம். நகரில் 260 பவுன் தங்க நகைகளை திருடியதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 260 சவரன் தங்க நகைகளை மீட்டனா்.

ஒசூா் டி.எஸ்.பி. முரளி தலைமையிலான போலீஸாா் அவரை ஒசூா் 2-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT