கிருஷ்ணகிரி

திமுக அமைச்சரவையில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டம்

DIN

திமுக அமைச்சரவையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் திமுகவினர் மட்டுமின்றி பொதுமக்கள், தொழில்துறையினர் ஆகியோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
 தமிழக அமைச்சரவை பட்டியல் தமிழக ஆளுநர் அலுவலகம் மூலமாக வியாழக்கிழமை வெளியானது. இந்த அமைச்சரவை பட்டியலில் மு.க.ஸ்டாலின் முதல்வர் மற்றும் 33 அமைச்சர்கள் பட்டியலில் வெளியானது. இவர்கள் வெள்ளிக்கிழமை காலை பதவி ஏற்கின்றனர். இந்த அமைச்சரவை பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம், தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் யாரும் அமைச்சரவையில் இடம் பிடிக்கவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இதனால் அமைச்சரவையில் இடம் பெற முடியாத நிலை. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு எம்எல்ஏக்களும் சேலம் மாவட்டத்தில் ஒரு எம்எல்ஏ வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் யாரும் இடம்பெறவில்லை. அதிமுக அமைச்சரவையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2011-இல் நடைபெற்ற தேர்தலில் கேபி முனுசாமி தமிழக அமைச்சராக ஆனார். அதேபோன்று 2016-ல் நடைபெற்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி தமிழக அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் திமுக ஆட்சியில் 2006 கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றும் யாரும் அமைச்சராக நியமிக்கப்பட வில்லை. 
இந்த தேர்தலில் 2021-ல்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நகரமான ஓசூரில் திமுக எம்எல்ஏ மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் பர்கூர் தொகுதியில் மதியழகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் ஓசூர் எம்எல்ஏவை பிரகாஷ் இரண்டாவது முறையாக சட்டப்பேரவைக்கு செல்கிறார். அவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். ஓசூர் எம்எல்ஏவை பிரகாஷ் இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என பொதுமக்கள், தொழில்துறையினர், திமுகவினர் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது பெயர் பட்டியலில் இடம் பெறாததால் ஏமாற்றமடைந்தனர்.
திமுக ஆட்சி தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை புறக்கணிக்கத்து வருகிறது. அதிமுக ஆட்சியில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் கட்டாயம் இடம் பெறுவர். ஆனால் இந்தமுறை திமுக அமைச்சரவை பட்டியலில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதாஜீவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று விருதுநகர் மாவட்டத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தென்னரசு ஆகிய இருவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்திற்கு கேஎன்நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை புறக்கணித்துள்ளார். ஏற்கனவே கொங்கு மண்டலங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் அதிமுக அதிக எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த மாவட்டங்களில் திமுக அமைச்சரவையில் யாரும் இடம்பெறாதது அடுத்த தேர்தலில் மேலும் திமுகவை வலுவிழக்கச் செய்யும். என அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தனியாக பிரித்து பிறகு 17 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இதுவரை திமுக சார்பில் அமைச்சர் ஆனதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT