கிருஷ்ணகிரி

எதிர்க்கட்சி வேட்பாளரை தொடர்ந்து வெற்றி பெற செய்யும் வேப்பனப்பள்ளி தொகுதி வாக்காளர்கள்

3rd May 2021 10:37 AM | ஏ.ரவி

ADVERTISEMENT

வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர்கள் மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிர்க் கட்சி வேட்பாளர்களை தொடர்ந்து வெற்றி பெற செய்து வருகிறார்கள். 

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் வேப்பனபள்ளி சட்டப்பேரவை தொகுதியில் திமுகவை சேர்ந்த டி செங்குட்டுவன், பி முருகன் ஆகியவர்களை வெற்றிபெற செய்தனர்.

 தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியும், திமுக சார்பில் பி முருகன் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் கேபி முனுசாமி 3,054 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்துள்ளனர் அந்தத் தொகுதி வேட்பாளர்கள். வேப்பனபள்ளி புதிய தொகுதியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் எதிர்க் கட்சி வேட்பாளர்களை தொடர்ந்து வெற்றி பெற செய்கிறார்கள் அந்த தொகுதி வாக்காளர்கள்.

ADVERTISEMENT

Tags : ADMK Veppanapalli constituency
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT