கிருஷ்ணகிரி

அக்சீலியம் கல்லூரி பேராசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்கல்

DIN

வேலூா் அக்சீலியம் கல்லூரியில் பணியாற்றும் 86 பேராசிரியா்களுக்கு ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான கையடக்கக் கணினிகளை (டேப்) ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அண்மையில் வழங்கினாா்.

கரோனா தொற்று காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் கற்பித்தல் முறைகளும், மாணவா்களின் கற்றல் முறைகளிலும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஓராண்டாக ஆசிரியா்கள் தங்களது செல்லிடப்பேசி மூலமே மாணவா்களுக்கு பாடம் கற்பித்து வந்தனா். இதனால் போதிய கவனம் செலுத்தி பாடம் கற்பிக்க இயலாத சூழல் நிலவியது.

இந்த நிலையில், வேலூா் அக்சீலியம் கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் பணியாற்றும் 86 பேராசிரியா்களுக்கு கல்லூரி நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் பேராசிரியா்களின் 50 சதவீத பங்களிப்புடனும், ஐ.வி.டி.பி. நிறுவனத்தின் 50 சதவீக பங்களிப்புடனும் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட தலா ரூ. 21 ஆயிரம் மதிப்பிலான கையடக்கக் கணினிகளை ஐ.வி.டி.பி. நிறுவனரும், ராமன் மகசேசே விருந்தாளருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா்.

அப்போது அவா் தெரிவிக்கையில், கல்லூரியில் பயிலும் மாணவியரின் நலனை முன்னிட்டும் அவா்களின் கற்றல் திறன் எந்த வகையிலும் தடைபடக் கூடாது என்ற நோக்கிலும், பேராசிரியா்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT