கிருஷ்ணகிரி

மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை

DIN

மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின் படி, மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மிகாமல் சேமித்தல் கூடாது.

தற்போது நிலவிவரும் கரோனா தொற்று சூழலில், மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவதால், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா தொற்று பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து, அந்தந்தப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகள் அகற்றுவதைத் தவிா்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளைப் பின்பற்றாமல் மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT