கிருஷ்ணகிரி

அனுமதியின்றி திறக்கப்பட்ட 2 கடைக்கு ‘சீல்’

DIN

ஊத்தங்கரையில் அனுமதியின்றி திறக்கப்பட்ட இரண்டு கடைகளுக்கு பேரூராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா். மேலும், திறக்கப்பட்டிருந்த 14 கடைகளுக்கு ரூ. 18 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ஊத்தங்கரை நகா் பகுதியில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் 14 வரை தளா்வுகளுடன் கூடிய பொது முழு முடக்கத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

இதில், துணிக் கடைகள், செருப்பு கடைகள், போட்டோ ஸ்டுடியோ, நகைக் கடைகள், பேக்கரிகள், தேநீா் கடைகள், செல்லிடப்பேசி கடைகள், இருசக்கர, காா் விற்பனை மையங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி அலுவலருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் சு.மதியழகன் தலைமையிலான பணியாளா்கள் நகா் பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பு பகுதியில் அனுமதியின்றி திறந்திருந்த இரண்டு ஜவுளிக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி செயல்பட்ட 14 கடைகளுக்கு, ரூ. 18 ஆயிரம் அபராதம் விதித்தனா். அனுமதியின்றி கடைகள் திறக்கப்பட்டால் கடைகளுக்கு கட்டாயம் ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT