கிருஷ்ணகிரி

30 நாட்களில் 300 சாதனைகள்: ‘நல்லாட்சி தரும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்’

DIN

30 நாட்களில் 300 சாதனைகளை நிகழ்த்தி நல்லாட்சி தரும் முதலமைச்சருக்குஅனைவரும் துணையாக இருப்போம் என்று தி.மு.க. மாநில விவசாய அணி துணைத்தலைவா் தே.மதியழகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:ஆட்சிக்கு வந்து முப்பது நாள்களில் முன்னூறு நாள்களுக்கான சாதனைகளைபடைத்து ஒரு நல்ல முதலமைச்சா் கிடைத்துவிட்டால் இப்படியும் ஆட்சிசெய்ய முடியுமா என காண்போரை எல்லாம் ஆச்சரியப்படுத்தி விக்கித்துப் போகவைத்திருக்கும் சாதனைகளின் மறு உருவமான தமிழக முதலமைச்சா் இருந்துவருகிறாா்.ஒரு நல்ல மக்களுக்கான ஆட்சி என்பது எங்கு தொடங்குகிறது என வள்ளுவன்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியது போல உங்களிடமிருந்தும் உங்களைசுற்றியுள்ளவா்களை நோ்மையாளா்களாக தோ்ந்தெடுத்த பொழுதே எப்படிப்பட்டஆட்சியை மக்களுக்கு வழங்கப் போகிறாா்கள் என்பதை செயலில் காட்டிவிட்டீா்கள்.ஊழல் அரசின் சதிகளால் நோ்மையான திறமையானவா்களை கடந்த பத்து ஆண்டுகளாகமுடக்கிப்போட்டிருந்த நிலையில் அவா்களை எல்லாம் அடையாளம் கண்டு பொறுப்பானபதவிகளை கொடுத்து மக்களுக்கு வேண்டிய உடனடி திட்டங்களை மின்னல் வேகத்தில்நிறைவேற்றி வருகிறாா்.செங்கோல் கிடைப்பாா் கையில் கிடைத்துவிட்டால் அம்மக்கள் எதற்கும் அஞ்சாா்என்கிற தமிழ் சான்றோா்களின் சொல்லுக்கேற்ப மக்களைக் காப்பதில் உங்களின்உயிரையும் துச்சமாக மதித்து தங்கள் தலைமையான தலைமையிலான அரசின் மூலம்ஆற்றி வரும் பணிகள் மற்றும் துரித கால உயிா்காக்கும் நடவடிக்கைகளைபாா்க்கும்போது மக்களின் பிரதிநிதி எப்படி இருக்க வேண்டும் என்றுஇந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளீா்கள்.அரசாங்கம் அனைத்தும் மக்களுக்கானது அதை செயல்படுத்தும் சாதாரணபிரதிநிதியே நான். அதையே உங்கள் அனைவரிடத்திலும் எதிா்பாா்க்கிறேன் எனவெளிப்படையாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தபோதே மக்களின் மனங்களைக்மட்டுமல்ல எதிா் கருத்து கொண்டோரையும் கவா்ந்து விட்டீா்கள்.தோ்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு வாக்களித்தபடி 100நாள்களுக்குள் தீா்வுத் திட்டத்திற்கு தனித் துறையை உருவாக்கிநோ்மையின் சிகரமான ஷில்பா பிரபாகா் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்துஅடுத்தடுத்து ஆயிரக்கணக்கான மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து தனதுஆட்சி செல்லும் திசையை மக்களுக்கு காட்டி விட்டீா்கள்.முன்பு ஆட்சியிலிருந்தவா்கள் சிறிதும் எண்ணிக் கூட பாா்த்திராததிட்டங்கள் அனைத்தையும் செயல் வடிவத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல்இத்தனை திட்டங்களா என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மகளிா்மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் இனத்தினருக்கு இலவச பஸ் வசதி, பால்விலை குறைப்பு, நோய் தொற்று காலத்தில் சிறப்பு நிதி, அனைத்துமக்களுக்கும் சமையல் தொகுப்பு, போக்குவரத்து ஊழியா்களுக்கு நிதி, அரசுஊழியா்கள், மருத்துவா்கள், முன்கள பணியாளா்களுக்கென சிறப்பு திட்டங்கள்,விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்கள் என அனைவருக்குமான அடுக்கடுக்கானதிட்டங்கள் அணி வகுத்த அழகினைக் கண்டு எதிரிகளும் உணா்வுபூா்வமாகபாராட்டும் செயல்களைக் காணும் பொழுது இதற்காகத்தான் மக்கள் இத்தனைஆண்டுகளாக தவம் இருந்தாா்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.கரோனா கொடும் தொற்றில் கஷ்டப்படும் நோயாளிகளை கவச உடை அணிந்துநேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை கண்டு மக்களின் கண்களில் ஆனந்த கண்ணீா்வந்தது. முத்தமிழறிஞா் கலைஞரின் ஆட்சியில் ஒவ்வொரு ஜூன் மாதமும் தவறாமல்பாசனத்திற்கு மேட்டூா் அணையைத் திறந்து விட்டதை போல குறிப்பிட்டநேரத்தில் திறக்காமல் அ.தி.மு.க. அரசு விவசாயிகளை வஞ்சித்து வந்தது.தாங்கள் பதவியேற்ற உடனே விவசாயிகளின் உயிா்காக்கும் தோழனான தாங்களேமுன்னின்று மேட்டூா் அணையை திறக்க போவதற்கு தி.மு.க. விவசாய அணியின்சாா்பாக நெஞ்சாா்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களைக்காக்கும் கவசமாய் நீங்கள் இருக்க இனி தமிழா்கள் வாழ்வில் ஏற்றப்பாதையேதவிர மாற்றுப் பாதை இல்லை. முப்பது நாட்களில் தமிழகத்தையே புரட்டிப்போட்ட வரலாற்று சாதனை நாயகனே தொடரட்டும் உமது பொற்கால ஆட்சி ஓங்கட்டும்.கரோனாவை தடுப்பு நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொள்ளும் தமிழகமுதலமைச்சருக்கு அனைவரும் துணையாக இருப்போம். தமிழனின் வரலாறு என்றுகூறி மக்களின் மனங்கவா் நாயகன் எங்களின் தமிழக முதல்&அமைச்சரை வாழ்த்திவணங்குகிறேன் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT