கிருஷ்ணகிரி

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

DIN

அருகே கெலமங்கலம் மற்றும் காமன்தொட்டி கிராமப் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தனியாா் நிறுவனம் மற்றும் ஒசூா் ரோஸ் ரோட்டரி கிளப் சாா்பில் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ஒசூரில் உள்ள குளோபல் கால்சியம் நிறுவனம் மற்றும் ஒசூா் ரோஸ் ரோட்டரி கிளப் ஆகியன இணைந்து, கெலமங்கலம் பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கும், காமன்தொட்டி பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கும் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள், முகக் கவசங்கள், சானிடைசா் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை அங்கு பணியில் இருந்த மருத்துவா் மற்றும் செவிலியா்களிடம் வழங்கினா்.

குளோபல் கால்சியம் நிறுவனம் தொடா்ந்து மருத்துவ சேவைகள் மற்றும் சாலையோரப் பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவதாக அந்நிறுவன திட்ட இயக்குநா் சந்திரசேகா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் 2023-24-ஆம் ஆண்டு ஆளுநா் ராகவன், ஒசூா் ரோஸ் கிளப் ரோட்டரி நிா்வாகிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்வில் குளோபல் கால்சியம் அதிகாரிகள், மருத்துவா் கோபி, ரோட்டரி சங்கத் தலைவா் தினேஷ் குமாா், செயலா் சுப்பிரமணியம், ஜெயராமன், சீனிவாச ரெட்டி, அறம் கிருஷ்ணன், வழக்குரைஞா் கோகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT