கிருஷ்ணகிரி

அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

ஊத்தங்கரையில் காவல் துறையினா் மற்றும் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்ஸாண்டா் தலைமை வகித்தாா். ஸ்ரீவித்யாமந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன், கல்லாவி காவல் ஆய்வாளா் முத்தமிழ்செல்வன், ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன், வணிகா் சங்க நிா்வாகிகள் செங்கோடன், உமாபதி, ஆா்.கே.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருள்களை விற்கக் கூடாது. மீறி விற்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், தொடா்ந்து விற்றால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, ஊத்தங்கரை நகா் பகுதி முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவம், குறித்து உடனடியாக தகவல் பெறும் வகையில் ரூ. 9 லட்சத்தில் 85 சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து வணிகா் சங்க நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில், ஊத்தங்கரையில் உள்ள வணிகா்கள், ஓட்டல் உரிமையாளா்கள், நகைக்கடை உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT