கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில்  இரண்டு லாரிகள் தீப்பிடித்து எரிந்தது போக்குவரத்து பாதிப்பு

28th Jul 2021 11:33 PM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலிருந்து கிருஷ்ணகிரியை நோக்கி சரக்குப் பெட்டக லாரி, இன்று பயணித்தது.

கிருஷ்ணகிரியை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு ஓட்டல் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது அதன் டயர் வெடித்ததால், நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியதில், இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிய தொடங்கின.

தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

ADVERTISEMENT

இந்த விபத்தால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர  காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : லாரி கிருஷ்ணகிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT