கிருஷ்ணகிரி

தமிழ்நாட்டில் கொங்கு நாடு என்ற பிரிவினைவாத விதையை விதிக்க வேண்டாம்: கேபி.முனுசாமி

12th Jul 2021 12:03 PM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கொங்கு நாடு என்ற பிரிவினைவாத விதையை விதிக்க வேண்டாம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக அரசு முடியும் போது மின்மிகை மாநிலமாகதான் தமிழகத்தை கொடுத்தோம். தற்போது 9 மாதங்களாக பணி செய்யவில்லை என அதிமுக மீது பழி போடவேண்டாம். மின்சார அமைச்சரின் செயல்பாடு திறமை உண்மையை வெளிப்படுத்துகிறது. பேரறிஞர் அண்ணா அரசியல் கட்சியை உருவாக்கிய போது திராவிட நாடு திராவிடர்க்கே என்ற கொள்கையுடன் இயங்கி வந்தார்.

நாட்டின் மீதும் நாட்டு மக்கள்  மீதும் அவர் வைத்திருக்கும் பற்றால், அப்படி பட்ட கொள்கையை கைவிட்டார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தமிழ்நாடு பிரிவதை விரும்பவில்லை. கன்னியாகுமரி முதல் சென்னை வரையில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் தமிழ்நாடு, தமிழர்கள் என்கிற உணர்வுடன் உள்ளனர். கொங்கு நாடு என்கிற பிரிவினை விதையை விதைக்கவேண்டாம். அப்படி ஒருவேலை கொங்கு நாடு என பிரிவினை வந்தால் தமிழ்நாட்டில் அமைதி பாதிக்கும்.

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படும் பொழுது, மத்திய அரசு  நடுநிலைமையோடு செயல்பட்டு உச்சநீதிமன்றம் சென்றால் என்ன தீர்ப்பு வழங்குவார்களோ அதை உணரந்து நடுநிலையோடு செயல்படவேண்டும். அதிமுக அரசு நதிநீர் பிரச்னையில் உரிய முறையில் அணுகி வந்தது. காவிரி நதிநீர் பிரச்னையில் ஜெயலலிதா சட்டபோரட்டம் நடத்தி வெற்றி பெற்றார். காவிரி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டது ஜெயலலிதா என தெரிவித்தார். அப்போது, கே. அசோக்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

Tags : ADMK
ADVERTISEMENT
ADVERTISEMENT