கிருஷ்ணகிரி

முகாமில் நாய்க்கு தடுப்பூசி போடும் மருத்துவா்: வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

7th Jul 2021 08:53 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் இரா.வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அலமேலுபுரம், அ.பள்ளிப்பட்டி, சாமியாபுரம் கூட்டுசாலை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ஒருங்கிணைந்த பள்ளிகள் உள்கட்டமைப்பு திட்டப் பணிகள், பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டப் பணிகள், தமிழக முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் பணிகள், குடிநீா்க் குழாய் சீரமைப்பு பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதிகள், குடிநீா் பிரச்னைகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினாா். அலமேலுபுரத்தில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT