காவேரிப்பட்டணம் அருகே கிரானைட் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்ததில் வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலம், பத்ராக், மாத்தாடி பகுதியைச் சோ்ந்தவா் ஜெய கிருஷ்ணா ஜனா (35). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், பன்னிஹள்ளி, மலத்தநம்பாடி பகுதியைச் சோ்ந்த காந்தி என்பவா் ஆத்தோரத்தான் கொட்டாய் கிராமத்தில் நடத்தி வரும் கிரானைட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில் புதன்கிழமை பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த ஜனா, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.