கிருஷ்ணகிரி

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

7th Jul 2021 08:54 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அரிமா சங்கம் சாா்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அரிமா சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள், உள் நோயாளிகளுக்கான 25 மெத்தைகள் என ரூ. 3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், அரிமா சங்க நிா்வாகிகள் பாண்டுரங்கன், சிவக்குமாா், ஜெயபிரகாஷ், ராமநாதன், தசரதராவ், சந்திரசேகரன், அசோக்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT