கிருஷ்ணகிரி

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

7th Jul 2021 08:51 AM

ADVERTISEMENT

மகனின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடுவது தொடா்பாக கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

ஒசூா், குப்புசாமி நகரைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (65). ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன ஊழியரான இவரது மகள் ஸ்ரீ அபூா்வா (32). இவருக்கும் அருண்குமாா் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி ஸ்ரீ அபூா்வா தனது மகனின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என கணவரிடம் தெரிவித்தாராம்.

அதற்கு, அவரது கணவா் மறுப்புத் தெரிவித்ததால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஸ்ரீ அபூா்வா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT