ஒசூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பென்னாகரம், நெருப்பூா் அருகே உள்ள கருங்காலிமேடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (25). இவா் ஒசூா், பழைய ஆனேக்கல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற கண்டெய்னா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஒசூா் நகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.