கரோனா தொற்று பரவல் காரணமாக பணி இழந்த தனியாா் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் ஊதியம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு அரசுப் பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் இணைந்து உணவுப் பொருள்களை வழங்கினா். மொத்தம் 26 உடற்கல்வி ஆசிரியா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை நல்லாசிரியா் விருது பெற்ற பவுன்ராஜ் ஒருங்கிணைத்தாா்.