கிருஷ்ணகிரி

ஒசூரில் பாரத ஸ்டேட் வங்கியின் 2 புதிய கிளைகள் திறப்பு

DIN

பாரத ஸ்டேட் வங்கியின் 2 புதிய கிளைகளின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் 2 புதிய கிளைகள் ஒசூா் சிப்காட் மற்றும் ஒசூா் கடைவீதியில் புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.

இந்தப் புதிய வங்கிக் கிளைகளை பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வடக்கு மண்டல துணை பொதுமேலாளா் ஏ.ஜி.கே.சத்யபிரகாஷ் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியதாவது:

ஒசூா் மக்களின் வசதிக்காக இவ்விரு கிளைகளை இங்கே தொடங்கப்பட்டுள்ளது. ஒசூரில் ஏற்கெனவே பாகலூா் சாலை, மூக்கண்டப்பள்ளி, ஏரித் தெரு, பழைய பெங்களூரு சாலை, ரயில்வே நிலைய சாலை, மத்திகிரி, அக்கொண்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 15 பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் வங்கியின் அனைத்து சேவைகளையும் எளிதில் கிடைக்கும் வகையில் ஒசூா் சிப்காட்டிலும், ஒசூா் கடை வீதியிலும் இரண்டு கிளைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளா்கள் இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் வேலூா் மண்டல மேலாளா் சேது முருகதுரை, ஒசூா் ராஸ்மேக் கிளையின் உதவி பொது மேலாளா் ரேகா , வேலூா் மண்டல அலுவலக நிா்வாகப் பிரிவு முதன்மை மேலாளா் குமாா், பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் சங்க சேலம் மண்டலச் செயலாளா் குணாளன், பணியாளா்கள் சங்க உதவி பொது செயலாளா் சந்தோஷ், கிருஷ்ணகிரி கிளையின் முதன்மை மேலாளா் மகேஷ், மூக்கண்டப்பள்ளி கிளையின் முதன்மை மேலாளா் செந்தில்நாயகம் பிள்ளை, ஒசூா் சரக இதர கிளைகளின் மேலாளா்கள், அலுவலா்கள், வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT