கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தின விழா

4th Jan 2021 01:21 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஊத்தங்கரை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் கே.மாரிமுத்து தலைமை வகித்து சித்த மருத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.

சித்த மருத்துவர் என். ஈஸ்வரி பொதுமக்களுக்கு சித்த மருத்துவம் பற்றியும், சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ADVERTISEMENT

Tags : krishnagiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT