பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, தருமபுரியில் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 167 போ் கைது செய்யப்பட்டனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற மறியில் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், பொருளாளா் கே.புகழேந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநிலத் தலைவா் பழனியம்மாள், தொலைத் தொடா்புத் துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பி.கிருஷ்ணன், மின் வாரிய பொறியாளா் அமைப்பு மாவட்ட அமைப்பாளா் ஆா்.சுந்தரமூா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். போராட்டத்தில் ஈடுபட்ட 167 பேரை போலீஸாா் கைது செய்தனா்.