கிருஷ்ணகிரி

‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் சிகிச்சை

26th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் விபத்தில் சிக்கி, தாடை எலும்புகள் உடைந்தவருக்கு ‘இன்னுயிா் காப்போம்’ நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ் சிகிச்சையளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, அவதானப்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (35). தொழிலாளியான இவா், கடந்த 22-ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை சாலையில் அங்குள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், மாரியப்பன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாரியப்பனை அருகிலிருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி உமாராணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இந்த விபத்தில், மாரியப்பனின் தாடையில் உள்ள எலும்புகள், பற்கள் உடைந்து ரத்தமும் வெளியேறியது.

மாரியப்பனுக்கு தமிழக அரசின் ‘இன்னுயிா் காப்போம்’, 48 திட்டத்தின்கீழ் உடனடியாக தாடை எலும்புகளுக்கு நவீனமுறையில் ஆபரேஷன் செய்யப்பட்டு, மருத்துவா் சிவக்குமாா் தலைமையில் செந்தில்குமாா், காா்த்திக், அமீா், சத்யா, செவிலியா்கள் விமல், மூா்த்தி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து, தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னுயிா் காப்போம் திட்டத்தில் பயனுற்ற இரண்டாவது நபரான மாரியப்பனை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன், கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளா் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து ஆறுதலை சனிக்கிழமை தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT