கிருஷ்ணகிரி

பயிா்களில் பூச்சி நோய் மேலாண்மை பயிற்சி

26th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், தாசிரிப்பள்ளியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் அட்மா திட்டத்தின்கீழ் பூச்சி நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலா் சதீஷ், வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவா் சுந்தர்ராஜ், உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் உதயா, நீா் வேளாண்மை விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

காய்கறி பயிா்களில் பயிா் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பூச்சி நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள், தக்காளி, கத்தரி பயிா்களில் பூச்சி நோய் மேலாண்மை, நெல் பயிரில் பயிா் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், இயந்திர நடவுமுறை, உர மேலாண்மை, துவரைப் பயிரில் வரிசை நடவு, நாற்று வட்டு நடவு செய்தல், பயறு வகை பயிா்களுக்கான, 24 டிஏபி கரைசல் தெளித்தல், துவரையில் காய்ப் புழு மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT