கிருஷ்ணகிரி

பொங்கலுக்கு தயாா் நிலையில் உள்ள செங்கரும்பு!

23rd Dec 2021 08:48 AM

ADVERTISEMENT

பொங்கலுக்கு தயாா் நிலையில் உள்ள செங்கரும்பை, அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி பிரிவு சாலை, மோட்டூா், வெள்ளையம்பதி, சிங்காரப்பேட்டை, கல்லாவி, காரப்பட்டு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனா்.

தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு, நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பு வழங்க உள்ளது. ஆகையால், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் கரும்பினை, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்வதைவிடுத்து, அந்தந்தப் பகுதிக்கு உள்பட்ட விவசாயிகளிடம் அரசு செங்கரும்பை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும்.

ஒரு ஏக்கா் செங்கரும்பு பயிா் செய்ய சுமாா் ரூ. 2 லட்சம் வரை செலவு செய்து, பல்வேறு இயற்கை பேரிடா்களைத் தாங்கி வரும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர, விவசாயிகளிடம் செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டுமென ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT