கிருஷ்ணகிரி

பேரொளி சிலம்பப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

23rd Dec 2021 08:44 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை பேரொளி சிலம்பப் பள்ளி மாணவா்கள், மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்றுள்ளனா்.

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி அண்மையில் காவேரிப்பட்டணத்தில் நடைபெற்றது. வயது, உயரம், எடை போன்ற பிரிவு வாரியாக நடத்தப்பட்ட போட்டியில், ஊத்தங்கரையைச் சோ்ந்த பேரொளி சிலம்பப் பள்ளி மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மதிசுவேதா, கிருஷ்ணா, சந்திரபோஸ், லோச்சனா, லோகிதா, சத்தியவாணி, விசாலினி உள்பட 29 போ், சீனியா், ஜூனியா், சப்-ஜூனியா் மற்றும் தனித்திறமை போன்ற பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாரட்டி சான்றிதழ், பதக்கங்களை சிலம்ப ஆசிரியா் சதாசிவம் வழங்கினாா். இதில், வெற்றிபெற்ற மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT