ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில், விபத்தில்லா பயணம் குறித்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ரவி முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா் லட்சுமி, விபத்தில்லா பயணம் குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு எடுத்துரைத்தாா் (படம்). இதில், மாணவா்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிா்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா். இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.