சின்னமுத்தூா் கிராமத்தில் பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டேகுப்பம் ஊராட்சி, சின்னமுத்தூா் கிராமத்தில் உள்ள கொல்லாபுரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, பெண்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சின்னமுத்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து குழுவாக பெண்கள் பால் குடங்களுடன், மேள தாளங்கள் முழங்க கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.