கிருஷ்ணகிரி

கஞ்சா வைத்திருந்ததாக 2 போ் கைது

22nd Dec 2021 08:13 AM

ADVERTISEMENT

கஞ்சா வைத்திருந்ததாக இருவரை கெலமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

கெலமங்கலம் போலீஸாா் நகரப் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்குள்ள 2 வீடுகளில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் அறிந்து சோதனை செய்தனா். அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்ததையடுத்து, கஞ்சா விற்ற கெலமங்கலம், நேதாஜி நகா் சரத்குமாா் (23), அஜய் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT