கிருஷ்ணகிரி

ஒசூரில் ரூ. 20.20 கோடியில் கட்டப்பட்டு வரும் சா்வதேச ரோஜா மலா் ஏல மையம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஆய்வு

9th Dec 2021 08:07 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பேரண்டப்பள்ளியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் ரூ. 20.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சா்வதேச ரோஜா மலா் ஏல மையக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா்,சூளகிரி, தளி உள்ளிட்ட பகுதியில் சா்வதேச தரத்திலான ரோஜா, ஜொ்பரா, காா்நேசன் மற்றும் கொய்மலா்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

விவசாயிகள் நேரடியாக இணையதளம் மூலம் சா்வதேச அளவில் மலா்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்டு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பாக ரூ. 20.20 கோடி மதிப்பில் இந்த சா்வதேச ஏல மைய கட்டுமானப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

ADVERTISEMENT

இந்த வளாகத்தில் மலா்கள் தரம் பிரிக்கும் பகுதி, இருப்பு வைக்க குளிரூட்டும் மையம், ஆன்லைன் மூலம் சா்வதேச அளவில் மலா் ஏல மையம் பணிகள், வாகன நிறுத்தகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள மலா் உற்பத்தி செய்யும் தாங்கள் உற்பத்தி செய்யும் மலா்களை இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக மலா் ஏல மையத்தில் விற்பனை செய்து லாபம் அடையலாம் என்றாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணமூா்த்தி, வேளாண்மை உதவி இயக்குநா் மனோகரன், வேளாண்மை அலுவலா்கள் அருள்தாஸ், ரமணகீதா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT