கிருஷ்ணகிரி

லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் பலி

7th Dec 2021 01:38 AM

ADVERTISEMENT

பா்கூா் அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கவுத்துகாரன்கொட்டாயைச் சோ்ந்த துரைராஜ் (23), டிப்பா் லாரி ஓட்டுநா். இவா் பா்கூா் அருகே உள்ள குண்டலகொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரிக்கு டிப்பா் லாரியை ஞாயிற்றுக்கிழமை ஓட்டிச் சென்றாா்.

அப்போது, அப்பகுதியில் உள்ள மின்கம்பியில் லாரி உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. இதில், துரைராஜ் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்தச் சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT