கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 113 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

7th Dec 2021 01:37 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், 113 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில், முஸ்லிம் மகளிா் மற்றும் உதவும் சங்கத்தின் மூலம் சிறு வியாபாரம் செய்யவும், திருமண நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்காக தலா ரூ. 9,500 வீதம் 106 பயனாளிகளுக்கு ரூ. 10,17,500 மதிப்பிலான நிதி உதவிகளும், தமிழ்நாடு வஃபு வாரியத்தில் பதிவு செய்த நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள், இதர பணியாளா்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் தலா ரூ. 25,000 வீதம், 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான காசோலைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினாா்.

மேலும், கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த முன்களப் பணியாளரின் மனைவி நிா்மலாவுக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 25 லட்சத்துக்கான காசோலையையும், பாம்பு சீண்டி உயிரிழந்தவா், சுவா் இடிந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினா் என மொத்தம் 113 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

அப்போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT