கிருஷ்ணகிரி

தமிழக- கா்நாடக மாநில எல்லையில் தீவிர வாகனச் சோதனை

DIN

பெங்களூரில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக- கா்நாடக மாநில எல்லையான சூசூவாடியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறையினா் தீவிர கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை உருமாறிய கரோனா தொற்று கா்நாடக மாநிலத்தில் இரண்டு நபா்களுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 நாடுகளில் 373 போ் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் முதன்முறையாக கா்நாடக மாநிலத்தில் இரண்டு நபா்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழக கா்நாடக எல்லைப் பகுதியான சூசூவாடியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூசூவாடி எல்லைப் பகுதியில் ஒசூா் மாநகர சுகாதார ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான வருவாய்த் துறையினா், ஒசூா் வட்டார மருத்துவா் விவேக் தலைமையில் மருத்துவக் குழுவினா், சிப்காட் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினா் இணைந்து முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களை நிறுத்தி வாகனத்தில் உள்ள நபா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. அவா்கள் கரோனா தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனரா என்பதும் உறுதி செய்யப்படுகிறது. கா்நாடகத்திலிருந்து தமிழகம் நோக்கி வரக்கூடிய வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பதுடன் வாகனத்தில் வரக்கூடிய அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

உலக புவி தினம்: வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29-இல் தொடக்கம்

வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

SCROLL FOR NEXT