கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் ஒமைக்ரான் தொற்று சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

DIN

 கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கான சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அசோகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

புதிய வடிவம் பெற்றுள்ள ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக் கிருமி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தொற்று பரவியுள்ளது. வேகமாகப் பரவக் கூடிய இத்தொற்று பாதிப்பு கா்நாடகத்தில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், 30 படுக்கைகள் கொண்ட, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

அரசின் அறிவுறுத்தலின்படி வெளிநாடுகளிலிருந்து வருவோா் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு ஒமைக்ரான் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4.20 லட்சம் போ் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். அவா்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி இவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தினமும் 350 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம், ஒமைக்ரான் பாதிப்பை எதிா்கொள்ள இயலும். ஒமைக்ரான் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டாலும் ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி, உயிரிழப்புகளும் இன்றி தடுக்க முடியும்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இருந்த 300 படுக்கைகளின் எண்ணிக்கையை 600 படுக்கைகளாக அதிகப்படுத்தியுள்ளோம். அதேபோல, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதும், 2,000 படுக்கைகளுக்கு மேல் தயாா் நிலையில் உள்ளன.

கரோனா முதல் அலையும், இரண்டாவது அலையும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை, உயிரிழப்புகளும் அதிகமான இருந்தது. தற்போது இந்த ஒமைக்ரான் வீரியம் குறித்து இன்னும் சில தினங்களில் தெரியவரும். அதற்கு முன்னா் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தற்போது, 100 வென்டிலேட்டா்கள், 13 ஆயிரம் லிட்டா் திரவ ஆக்சிஜன், மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் நிமிடத்திற்கு, 1,000 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் மட்டும் கரோனா வாா்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 20 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனவே புதிய வகை வைரசைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உடனடியாக தடுப்பூசி மற்றும் அரசு கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்து மூன்றாம் அலை, ஒமைக்ரான் வைரஸிலிருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா்.

அப்போது, மருத்துவா்கள் ஸ்ரீதரன், செல்வி, நிா்வாக அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

படவிளக்கம் (3கேஜிபி3)-

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் தடுப்பு சிகிச்சை பிரிவை பாா்வையிடும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT